மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நபரொருவர் இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மெட்கொள்ளப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிலங்குளம்,நொச்சிக்குளம் பகுதியில் நேற்று (19) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.விவசாயி ஒருவர் வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் ரதுப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மை காலமாக இந்த கிராமத்தில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இடம் பெற்ற சம்பவத்தை கண்டித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.