கொவிட் காலத்தில் வணிக நிறுவனங்களுக்கு கடன் தொகை செலுத்த சலுகை வழங்கப்பட்டாலும், வணிக வங்கிகள் அதனைக் கையாண்ட விதத்தில் நாட்டில் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வர்த்தக வங்கிகள் கடனை செலுத்தாத காலம் தொடர்பான கடன் தொகையினை புதிய பகுதியாக கடனாக மாற்றியமையினால் வர்த்தகர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையின் கீழ், முதல் கடன் தவணை மற்றும் வட்டி தொகை கடன் தொகையாக மாறுதல் மற்றும் கடனை அடைக்காத போது கடன் தொகையும் வட்டியும் கடன் தொகையாக மாறுவதால் இந்த வணிக நிறுவனங்கள் பரேட் சட்டத்தின் கீழ் ஏலம் விடப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% மற்றும் வேலைவாய்ப்பில் 52% பங்களிக்கும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை சிரமத்ததை எதிர்கொள்ள வைத்துள்ளதுடன் வங்கிக் கட்டமைப்பை பாதுகாக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.