நிலவும் வறட்சி காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீர் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்கு களனி ஆற்றின் குறுக்கே தற்காலிக அணை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
நிலவும் வறட்சி காரணமாக நீர் பாவனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது