பாவனைக்கு உதவாத அழகுசாதனப் பொருட்கள் மீட்பு!

மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் அடங்கிய அழகுசாதனப் பொருட்கள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நான்கு அழகு சாதனப் பொருட்களை விற்பனை நிலையங்களில் நேற்று (21.02) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இவ்வாறு பாவனைக்கு உதவாத அழகுசாதனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வசமிருந்த மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 1143 வகையான அழகுசாதனப் பொருட்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 45, 52 வயதுடைய கல்கெடிஹேன, மொரட்டுவ மற்றும் வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version