ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பு வேலிகள்..!

400 ரயில் கடவைகளில் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 1200 பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் H.M.K.W.பண்டார தெரிவித்துள்ளார்.

அரசின் பல்நோக்கு திட்டத்தின் கீழ் பணியில் அமர்த்தப்பட்டவர்களை கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு வேலிகள் இல்லாத அதிகளவான ரயில் கடவைகள், புத்தளம் மற்றும் கரையோர மார்க்கத்தில் காணப்படுகின்றன.

இவற்றில் சில கடவைகளுக்கு பொலிஸாரினால் பாதுகாப்பு வேலிகள் பொருத்தப்பட்டிருந்த போதிலும், அண்மையில் புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ, மையாவ ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தின் பின்னர், அந்த வேலிகள் அகற்றப்படும் என பொலிஸார் தெரிவித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் H.M.K.W.பண்டார மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version