பாடசாலைமட்ட போதைப்பொருள் முற்தடுப்பு பணிகளுக்கான உறுப்பினர் தெரிவு!

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மட்டக்களப்பு கல்குடா சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான உயர்தர பாடத் தெரிவு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் தெரிவு, மத்தியஸ்சபை அனுகுமுறைகள் தொடர்பான விளக்கங்கள் துறைசார் உத்தியோகத்தர்களால் விளக்கமளிக்கப்பட்ட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிர்வு தெரிவித்துள்ளது.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் ரீ.கேந்திரராஜா, போதைப்பொருள் தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், திறன்விருத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர், விதாத அபிவிருத்தி உத்தியோகத்தர், புதிதாக உள்ளீர்க்கப்பட்ட உயர்தர பிரிவு மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version