ஹோட்டல் அறையில் இருவரின் சடலங்கள் மீட்பு!

பொத்துவில் – அறுகம்பே பகுதியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறை நீண்ட நேரம் திறக்கப்படாததை அடுத்து, ஹோட்டல் நிர்வாகம், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

தன்னுடன் தங்கியிருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு குறித்த ஆணும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply