மரக்கறி விலைகளில் மாற்றம்!

சந்தையில் மரக்கறிகளின் விலை, மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட கரட், போஞ்சி, கோவா, கறிமிளகாய் போன்ற காய்கறிகளின் விலை தற்போது வேகமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மெனிங் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 300 ரூபாவுக்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 150 ரூபாவுக்கும் பச்சை மிளகாய் கிலோ 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கடந்த சில நாட்களாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டு வந்ததுடன், நுரகர்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.

Social Share

Leave a Reply