மட்டக்குளி, அலிவத்தை பகுதியில் நேற்று (13.03) மாலை பதிவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பல வீடுகள் மீது மக்கள் குழுவினால் தாக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
24 வயதுடைய இளைஞரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் துப்பாக்கிதாரிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரியவந்துள்ளது.