ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று ஆரம்பமானது.
இந்த தேர்தலுக்கு 11.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 1 இலட்சம் வாக்காளர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ரஷ்யாவில் முதற்தடவையாக மூன்று தினங்களுக்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன் முதற்தடவையாக ஒன்லைன் மூலம் வாக்களிக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் தற்போதைய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதுடன் அவரை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் விளாடிமிர் புடின் 5 ஆவது முறையாக ஜனாதிபதியாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.