மலேசியாவில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட பலர் கைது

மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் மலேசியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவது குடிவரவுத் திணைக்களத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முறையான அனுமதியின்றி வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பு மற்றும் தங்குமிடங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என மலேசிய குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply