மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பசில்? 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான இன்று (21) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த சந்திப்பின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கொள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று(20) கட்சியின் குழுக் கூட்டம் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றுள்ளது. 

எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் மே தினக் கூட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று(20) இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் பசில் ராஜபக்ஷ இன்று(21) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும், அதன் பின்னரே ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த வாரமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பசில் ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply