மைத்திரி வெளியிட்ட உண்மை?

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தனக்கு நன்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

கண்டியில் நேற்று(22) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சிறு குற்றவாளிகள எனவும், உண்மையான குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

தன்னை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால், உண்மையான குற்றவாளிகள் தொடர்பில் வெளிப்படுத்துவதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply