மாடியிலிருந்து தவறி விழுந்ததில் ஒருவர் பலி

தலவாக்கலையில் அமைந்துள்ள 3 மாடி வர்த்தக நிலைய கட்டடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (19/11) காலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மாடியிலிருந்து தவறி விழுந்ததில் ஒருவர் பலி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version