வவுனியா வைத்தியசாலைக்கு கழிவகற்றும் வாளிகள் நன்கொடை

வவுனியா போதனா வைத்தியசாலையின் சகல விடுதிகளுக்கும் கழிவகற்றும் வாளிகள் இன்று(24.03) வழங்கப்பட்டுள்ளன. காலம்சென்ற வைத்தியர் செல்வரத்தினம் லவன், காலம்சென்ற முன்னாள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மாகாண முகாமையாளர் ஸ்ரீஸ்கந்தவேல் ஆகியோர் நினைவாக அவரது குடும்பத்தினர் மற்றும் பாலசிங்கம் முகுந்தன் ஆகியோர் இணைந்து இந்த உதவியை வைத்தியசாலைக்கு வழங்கி வைத்தனர்.

வவுனியா போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிலக்சனிடம் இந்தப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறன வேறுபட்ட நிற வாளிகள் வழங்கப்படுவதன் மூலம், விடுதிகளில் கழிவுகள் வேறு பிரித்து போடப்படுவதனால் கழிவகற்றல் இலகுபடுத்தப்படும் அதேவேளை மக்களும் அசௌகரியங்களை சந்திக்கமாட்டார்கள்.

வவுனியா வைத்திசாலைக்கு வைத்தியர் லவனின் இந்த வருட நினைவு நாளில் அவரது குடும்பத்தால் மேலும் 1000 கிளினிக் கொப்பிகள் மற்றும், 500 படுக்கை விரிப்புகளை வழங்கப்படவுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலைகளுக்கு தனியே அரசாங்கத்தின் கொடுப்பனவுகள் மட்டுமே போதுமானதாக அமைவதில்லை. மக்களுக்கு உரிய சேவைகளும், நல்ல சேவைகளும் கிடைக்கவேண்டுமானால் இவ்வாறான உதவிகளும் வழங்கப்படுவதே அவசியமானதே. இலங்கையின் முதன்மை வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையே பல உதவிகள் மூலமே இயங்குகிறது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

வவுனியா வைத்தியசாலைக்கு கழிவகற்றும் வாளிகள் நன்கொடை
வவுனியா வைத்தியசாலைக்கு கழிவகற்றும் வாளிகள் நன்கொடை

Social Share

Leave a Reply