மன்னார் கரப்பந்தாட்ட பிரீமியர் லீக் பரிசளிப்பு விழா..!

மன்னார் கரப்பந்தாட்ட பிரீமியர் லீக்கினால் கடந்த சில மாதங்களாக நடாத்தப்பட்ட கரபந்தாட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகள் மற்றும் கடந்த காலத்தில் கரபந்தாட்டப் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு  பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வு துள்ளுகுடியிருப்பு கரப்பந்தாட்ட மைதானத்தில் நேற்று இரவு 7.30 இற்கு நடைபெற்றது.

கரப்பந்தாட்ட போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற 64 போட்டிகளில் மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

இந்நிகழ்வின்போது இந்த மூன்று அணிகளின் கண்காட்சி போட்டிகளும் இடம்பெற்றன.

இவ்விழாவில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சரும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத் தலைவருமான கே.காதர் மஸ்தான் கலந்து கொண்டார்.

மற்றும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் ,மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், அருட்பணி லோறன்ஸ் லியோன் , தாராபுரம் மௌலவி எம்.எஸ்.முகமது உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் ஒதுக்கப்பட்ட 15 இலட்சம் ரூபாவில் புனரமைப்பு செய்யப்பட்ட கரபந்தாட்ட மைதானம் சம்பிராதய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

Social Share

Leave a Reply