எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்போது, ஆலயங்களுக்கு வருகை தரும் பொது மக்களையும் அவர்கள் கொண்டுவரும் பொதிகளை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினம் எதிர்வரும் 31ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.