குருநாகல் அலவ்வ பகுதியில் மா ஓயா ஆற்றில் நீராட சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஐந்து பேர் அடங்கிய மாணவர் குழுவொன்று நீராட சென்ற போது விபத்து சம்பவித்ததாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நீரில் மூழ்கிய மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.