வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் முன்னாள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார்.

ஓமந்தையில் சற்றுமுன் விபத்து சம்பவித்துள்ளது.

கடமை நேரத்தின் பின்னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவர் பயணித்த வாகனமும் டிப்பர் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த வைத்திய அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply