கச்சத்தீவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜீவன் 

இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா வெளியிடவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது குறித்து இந்தியாவிடம் இருந்து இதுவரையில் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தியா அவ்வாறான கோரிக்கைகளை முன் வைக்கும் பட்சத்தில், இலங்கை வெளியுறவுத்துறை குறித்த விடயம் தொடர்பில் பதில் அளிக்கும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்

Social Share

Leave a Reply