சந்தையில் முட்டை விலை அதிகரித்தால், அரசாங்கம் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சந்தையில் முட்டை விலையில் குறைவடைந்திருந்த போதும், தற்போது முட்டை ஒன்றின் விலை 50 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சந்தையில் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால், முட்டையின் விலையும் அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.