ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ள ஈ.பி.டி.பி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

யாழில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக போட்டியிடுவார் எனவும், அவரையே ஈ.பி.டி.பி. கட்சி ஆதரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை எதிர்வரும் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் எனவும் ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடக பேச்சாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply