இஸ்ரேல் மீது ஈரான் திடீர் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நேற்று(13) இரவிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துல்ல போதும்  பெரும்பாலான தாக்குதல்கள் இஸ்ரேலிய எல்லைகளுக்கு வெளியே முறையடிக்கப்பட்டுள்ளதாக  இஸ்ரேலின் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

இவற்றுள் 10க்கும் மேற்பட்ட க்ரூஸ் ஏவுகணைகள் அடங்கியுள்ளதாகவும்  இராணுவ செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஈரான் 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் ஊடாக தாக்குதல் நடத்திவருவதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலை தடுத்து நிறுவத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் உடனிருக்க உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version