இவ்வருடத்தில் 21,000 கடந்த டெங்கு நோயாளர்கள்இவ்வருடம் பதிவாகிய டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை 21,000 கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் ஏப்ரல் 13ம் திகதி வரையான காலப்பகுதியில் 21,028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள்(4,527) பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் 7,547 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஏப்ரல் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 989 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக, டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றாடலை சுத்தமாக பேணுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.