கச்சத்தீவுக்கும், மீனவர் பிரச்சனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை-இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் தமிழக தேர்தல் மேடைகளில் அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வடக்கு தமிழ் மக்களுக்கு வேதனை அடைவதாக அன்னலிங்கம் அன்னராசா நேற்று(14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான உறவு தொடர வேண்டும் என்றும் பூகோள அரசியல் ரீதியாக இந்திய அரசுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புவதாகவும் இலங்கை மீனவர்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.