கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலொன்று நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிலாபம் நோக்கிச் செல்லவிருந்த ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த ரயில், கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்த போது நடைமேடையில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தினால் யாருக்கும் காயங்கள் ஏதுவும் ஏற்படவில்லை என்பதுடன், ரயிலின் முன் பகுதியும், நடைமேடையின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்கள மட்டத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.