நடை மேடையில் மோதிய ரயிலின் சாரதி பணியிடை நீக்கம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் மேடையில் ரயில் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய ரயில் சாரதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் நோக்கி பயணித்த ரயில் நேற்று(15) மாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் மேடையில் மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தின் காரணமாக மேடை கடுமையாகச் சேதமடைந்த போதும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply