யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு, நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
37 வயதான குறித்த நபர், தாய் மற்றும் மகள் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்று, அப்பகுதியில் உள்ள காணியொன்றில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதல் பிரச்சினையின் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.