எக்ஸ்(X) என பெயர் மாற்றப்பட்டுள்ள டுவிட்டர் தளத்தில் புதிதாக இணையும் நபர்களிடம் கட்டணம் அறவிடபடவுள்ளது.
எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் நபர்களிடம் கருத்துக்களை பதிவிட, பிறரின் கருத்துக்கு பதிலளிக்க, பதிவுகளை லைக் செய்ய மற்றும் பதிவுகளை புக்மார்க் செய்வதற்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் போலி கணக்குகளை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தற்போது நடைமுறையில் உள்ள இந்த முறைமை, விரைவில் உலகம் முழுவதும் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் கடந்த வருடம் ஜூலை மாதம் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருந்த நிலையில், அதனை எக்ஸ்(X) என பெயர் மாற்ற செய்ததுடன் குறித்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார்.