முன்னாள் பிரதி அமைச்சர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு 

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

அவர் தனது வீட்டில் இன்று(16) பிற்பகல் இரண்டு மின் சுற்றுகளை இணைக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கிய நிலையில், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாலித்த தெவரப்பெரும ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு, 2010ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்த நிலையில் 2020ம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார். 

2015ம் ஆண்டு அவர் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply