இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தப்பத்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த தென்னாபிரிக்க அணியுடனான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் சமரி அத்தப்பத்து ஆட்டமிழக்காது 195 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதன் காரணமாக தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.
மேலும், ஆடவர் மற்றும் மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் போது அதிகளவு ஓட்ட எண்ணிக்கையை கடந்து வெற்றி பெற்ற போட்டியொன்றில், அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனையாக சமரி அத்தப்பத்து சதனைப் புத்தகங்களிலும் இடம்பிடித்தார்.
சமரி அத்தப்பத்து, 101 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3513 ஓட்டங்களை குவித்துள்ளார்.