யாழில் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு 

யாழ்ப்பாணம், நெடுந்தீவிலுள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 

நேற்று(22.04) நடைபெற்ற போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தை திறப்பதால் இளம் சந்ததியினர் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டியிருந்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெடுந்தீவு பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்துடன், அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக பிரதேச செயலாளர் உறுதியளித்ததன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. 

Social Share

Leave a Reply