அரச வருமானத்தில் மாற்றம் 

2024ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்தை விட அதிக வருமானத்தை ஈட்ட முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், நாட்டின் பிரதான வருமானம் ஈட்டக்கூடிய இலங்கை சுங்கம் மற்றும் கலால் வரி திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக 834 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட 6% வருமான அதிகரிப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். 

2024ம் ஆண்டிற்குள் 4,106 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply