பெரிய வெங்காய இறக்குமதிக்கு அனுமதி

இந்தியாவில் இருந்து 2,000 மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதிக்கான நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்திருந்த தடை இலங்கைக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply