க.பொ.த சாதாரண தர பரீட்சை குறித்து விசேட அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் 06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளும் அடுத்த மாதம் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply