சுற்றுலாத்துறையை மேம்படுத்த 07 நாடுகளுக்கு இலவச விசா – அமைச்சரவை இணக்கம்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 07 நாடுகளுக்கு இலவச விசா வழங்க,
அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்துரைத்த போது அமைச்சர் நேற்று (26) இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்
பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.

மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று
நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply