ஜனாதிபதி தேர்தலுக்கு புதிய யுக்தி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முதல் வாக்கினை தமிழ் வேட்பாளருக்கும், 2ம், 3ம் வாக்கினை விரும்பிய வேட்பாளருக்கும் வழங்குவதே சிறந்த யுத்தி என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில்  மேலும் கருத்து தெரிவித்த  சி.வி. விக்னேஸ்வரன், 

“தமக்கு விரும்பிய சிங்கள கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாத நிலை உருவாகும் என பலரும் தயங்குகின்றனர். முதல் வாக்கினை பொது வேட்பாளருக்கும், 2ஆம், 3ஆம் வாக்குகளை தாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கும் வழங்க முடியும்”

” இவ்வாறான சந்தர்ப்பத்தில் கலவரம் வெடிக்கும் என கருதுகின்றனர். அவ்வாறு கலவரம் ஒன்று உருவாகினால் இந்த சூழலில் எவ்வாறான நிலை ஏற்படும் என சிங்கள தலைமைகள் நன்கு விளங்கியுள்ளனர். புதுப் புது யுத்திகளை பயன்படுத்தி எமது உரிமைகளை பெற வேண்டும். எமது காணிகளை அபகரித்து, பெளத்த விகாரைகளை அமைக்கின்றனர்” என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Social Share

Leave a Reply