புத்தளம் – கல்பிட்டி, கண்டக்குடா பகுதியில் தாய் தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.
கண்டக்குடா பகுதியில் வீடொன்றுக்கு அருகிலிருந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து தாழையடி பகுதியை சேர்ந்த சிசுவின் 32 வயது தாய் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகவீனமுற்றிருந்த குழந்தையையும் தன்னையும் கணவர் கவனிக்காத நிலையில், சிசுவின் தாய் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.