தியத்தலாவ Fox Hill கார் பந்தய விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு நட்டஈடு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த 7 பேருக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 250,000 ரூபாவும் நட்ட ஈடாக வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தியத்தலாவையில் கடந்த மாதம் 21ம் திகதி நடைபெற்ற 2024 Fox Hill கார் பந்தயத்தின் போது, ஒரு கார் தடத்தை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்ததுடன், சிலர் காயமடைந்தனர்.