க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை அறிவித்தார்.

இதன்படி, 2023ஆம் ஆண்டு இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகளே வெளியிடப்படவுள்ளன.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பமாகி 15ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply