NPL 2024 மூன்றாம் நாள் போட்டி முடிவுகள்

ஜப்னா கிளாடியேட்டர்ஸ் மற்றும் கிளிநொச்சி பய்ட்டர்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (04.05) நொர்தேர்ன் பிரீமியர் லீக்கின் 3 ஆவது போட்டியாக வவுனியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் யாழ்ப்பாணம் அணி 142 ஓட்டங்களினால் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய யாழ்ப்பாணம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. இதில் ர்நெவ்டோ 70(22) ஓட்டங்களையும், ரவீந்திரன் மதுஷன் 31(15) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பொன்னுத்துறை கஜேந்திரா 2 விக்கெட்களையும், அஜித், ஜஜீவன் வைத்திலிங்கம், தர்மேந்திரம் அபிராஜ், முகுந்தன் நிதுசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய கிளிநொச்சி அணி 15.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களை பெற்றது. இதில் பொன்னுத்துறை கஜேந்திரா 37(17) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அஜய், அஜித் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஞானசேகரம் ரதிஷன் 2 விக்கெட்களையும், கிருஷ்ணபிள்ளை வினுஷாந்த், ர்நெவ்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக ர்நெவ்டோ தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா வைகிங்ஸ் மற்றும் மன்னார் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (04.05) நொர்தேர்ன் பிரீமியர் லீக்கின் 4 ஆவது போட்டியாக வவுனியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் மன்னார் அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய மன்னார் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹமில்டன் ரோய் 85(49) ஓட்டங்களையும், திலீபன் 37(21) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கீர்த்தனன் 4 விக்கெட்களையும், பனுஷன் 3 விக்கெட்களையும், ஜிதர்ஷன் ஷண்முகப்பிள்ளை, பாலநாதன் யசோதரன், ட்ரபின் தியோகிநாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய வவுனியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. இதில் பாலகிருஷ்ணன் ஷாந்தரூபன் 97(49) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மில்டன், திலீபன், சுஜன் மெயாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், சுமித்ப்ரின் டியாஸ், ரூட் டானியல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக ஹமில்டன் ரோய் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply