வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட
50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை நாட்டுக்குள் புத்துயிர் பெற்று வரும் நிலையில் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைத் தருகின்ற போது அறவிடப்படும் விசா கட்டணத்தை தொடர்ச்சியாக 50 டொலர்கள் என்ற வரையறைக்குள் பேணுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது சுற்றுலாத் துறையினர் கோரிக்கை அண்மையில் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.