உலகளவில் Covishield தடுப்பூசியை திரும்பப் பெற்றுக்கொள்வதாக AstraZeneca நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ளும் பல தடுப்பூசிகள் சந்தைகளில் காணப்படுவதால், Covishield தடுப்பூசிக்கான தேவை குறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
“Oxford பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் Covishield மிகவும் அரிதான பக்க விளைவாக இரத்தம் உறைதல் ஏற்படலாம்” என லண்டன் உயா் நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடா்பான வழக்கில், கடந்த பெப்ரவரி மாதம் பிரிட்டனை சேர்ந்த AstraZeneca நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் Serum நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட Covishield தடுப்பூசியில் 175 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், Vaxzevria கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெற்றுக்கொள்வதாக AstraZeneca நிறுவனம் அறிவித்துள்ளது.