4 தொடர் வெற்றிகளுடன் அசத்தும் பெங்களூரு அணி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ்  அணிக்கு எதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றியீட்டியுள்ளது. 

தர்மசாலாவில் இன்று(09.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி 92 ஓட்டங்களையும், ராஜட் படிதர் 55 ஓட்டங்களையும், கமரூன் கிரீன் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

242 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி சார்பில் ரைலி ரூசோ 61 ஓட்டங்களையும், சஷாங் சிங் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

பெங்களூரு அணி சார்பில் பந்து வீச்சில் மொஹமட் சிராஜ், ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், லோகி பெர்குசன், கரன் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

இதன்படி, இந்த போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பெங்களூரு அணியின் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய பெங்களூரு அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் 9ம் இடத்திலும் உள்ளது. இதன் காரணமாக பஞ்சாப் அணி இவ்வருட ஐபிஎல் தொடரின் Playoffs சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பினை இழந்தது. 

Social Share

Leave a Reply