மஹித்தவின் பரிந்துரைக்கு மத்தியிலும், மறுசீரமைக்கப்படவுள்ள மின்சார சபை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரச சொத்துக்கள் விற்பனை செய்வதை எதிர்வரும் தேர்தல் வரை ஒத்திவைக்குமாறு யோசனை முன்வைத்துள்ள போதிலும், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷமன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று(13.05) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அரச நிறுவனங்களை விற்பனை செய்வதை ஒத்திவைக்குமாறே மஹிந்த ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பை ஒத்திவைக்குமாறு அவர் கோரவிலை எனவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார். 

மின்சார சபையை விற்பனை செய்யும் நேக்கம் தமக்கு இல்லை என்பதால், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரச சொத்துக்கள் விற்பனை செய்வதை எதிர்வரும் தேர்தல் வரை ஒத்திவைக்குமாறு யோசனை முன்வைத்து நேற்று(12.05) அறிக்கை வெளியிட்டிருந்தார். 

குறித்த அறிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் இடைக்காலத் தன்மையை சுட்டிக்காட்டியிருந்த முன்னாள் ஜனாதிபதி, அரச சொத்துக்கள் தொடர்பான தீர்மானங்களை வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கும் ஆணைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உருவாக இருக்கு நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply