கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளம்

இரண்டு நாட்களாக கொழுப்பில் பெய்து வரும் கடும் மழையினால் பல முக்கிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்று(20.05) காலை வேளையில் கன மழை பெய்து வருவதனால் பல முக்கிய வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பித்ததுள்ள நிலையில் வாகன நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டுனர்கள், வேலைக்கு செல்பவர்கள் உரிய முன் ஆயத்தங்களுடன் செய்றபடுவது சிறந்தது. மேல் மாகாணத்தில் இன்றும் 100 mm மழை பெய்யுமென வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version