களுத்துறை – கட்டுக்குருந்த பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உயிரிழந்தவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.