இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனேடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடா பிரதமர், இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்காக எப்போதும் வாதிடுவோம் என தெரிவித்திருந்தார்.
நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அத்தியாவசிய மதிப்புகளான மதச் சுதந்திரம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவம் என்பவற்றுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்துவதாக கனேடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்தார்.
கனேடா பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்றைய தினம் (21.05) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதனுடாக கனேடா பிரதமரின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.