இந்தியாவில் காணாமல் போன பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் 

இந்தியா, கொல்கத்தாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகைதந்திருந்த பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசிம் அனர் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

இவர் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவின் கொல்கத்தா நகரிற்கு கடந்த 12ம் திகதி வருகைத்தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் வெட்டி வீசப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

பொலிஸாரின் விசாரணைகளின் போது, கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் நபரொருவரின் வெட்டி வீசப்பட்ட சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் கொல்கத்தாவில் நண்பர் ஒருவரின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நிலையில் காணாமல் போனதாக கொல்கத்தா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த நபரின் உறவினர்கள் பங்களாதேஷ் பிரதமரிடம் இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளதுடன், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள பங்களாதேஷ் தூதரகங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply