தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு 

அனைத்து ஜனாதிபதித் தேர்தலின் போதும் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில்  கட்சி உறுப்பினர்களுடன் நேற்று(25.05) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படாதவாறு அறிவுபூர்வமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டுமென நாமல் ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவர்களுக்காக பணியாற்ற தாம் தயாராகவும், தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெறாத மஹிந்த ராஜபக்‌ஷ தான் தமிழர்களுக்காக தொடர்ந்தும் பணியாற்றியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply